விளக்கு ஏற்றும் முறை
ஆன்மீக நாட்டம் உள்ள யாவரும் தங்கள் இல்லத்தில் தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் விளக்கு ஏற்றுவார்கள். ஒரு சிலர் நேரமின்மை காரணமாக ஒரு வேளை மட்டும் விளக்கு ஏற்றுவார்கள். வேறு சிலரோ வெள்ளிக்கிழமை மற்றும் சில பண்டிகை மற்றும் சுப நாட்களில் மட்டும் விளக்கு ஏற்றுவார்கள். ஆனால் நியமப்படி இரண்டு வேளையும் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். நாம் ஏற்றும் விளக்கானது அக இருள் மற்றும் புற இருளை விலக்க வல்லது. புற இருள் என்பது நமது சுற்றுப் புறத்தில் காணப்படும் இருள். அக இருள் என்பது அறியாமை என்னும் இருள் ஆகும். எனவே நாம் ஏற்றும் விளக்கானது அறிவையும், மங்களகரமான வாழ்க்கையையும், ஆன்மீக உயர்வையும் குறிக்கிறது. விளக்கை ஏற்றுவதால் ஒளி நிறைவது மட்டுமல்லாமல், அந்த இடத்தில ஒரு நேர்மறையான சக்தி நிரம்பி இருப்பதை நாம் காணலாம். விளக்கு ஒளியைக் காணக் காண நம் மனதினுள் புத்துணர்ச்சி பரவுவதைக் காணலாம். சில வகையான தாவர எண்ணெய், அதிலும் குறிப்பாக நல்லெண்ணெய், அல்லது நெய் உபயோகித்து விளக்கு ஏற்றினால், அந்த சூழலே நேர்மறையாக திகழும். அதனால் தான் எந்தவொரு புனித நிகழ்வாக...